கிளிநொச்சியில் புலி கிணற்றில் இருந்து மீட்பு!

கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளத்தில் ஆள்களற்ற காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து 4 அடி நீளமான சிறுத்தைப்புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

pulee-siruththai-tiger

சிறுத்தை கிணற்றில் வீழ்ந்துகிடப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.

எனினும் அங்கு ஒருவரே உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டதால் இராணுவத்தினரின் உதவியுடன் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சிறுத்தை மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.