கிராமிய மட்டத் தலைவர்களின் விவரம் திரட்டும் சீருடையினர்

RegPenகிராம ரீதியான அமைப்புக்களின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்களின் விவரங்கள் சீருடையினரால் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாள்களாக அந்தந்தப் பிரிவு முகாம்களின் சீருடையினரே இந்த விவரம் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா கடந்த வாரம் பதவியேற்றிருந்தார். இதன் பின்னர் கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த மினி முகாம்கள் படையினரால் அகற்றப்பட்டிருந்தன.

இவ்வாறானதொரு நிலையில் கிராம மட்ட அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள், ஆலய அமைப்புக்கள், சனசமூக அமைப்புக்களின் தலைமைப் பொறுப்புக்களில் உள்ளவர்களின் விபரங்களை இப்போது சீருடையினர் திரட்டி வருகின்றனர்.

இது தொடர்பில் சீருடையினரால் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு அவை பூரணப்படுத்திப் பெறப்படுகின்றன. குறிப்பாக வலி.தென்மேற்கு பிரதேசத்திலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.