காவிரி பிரச்சனையின் எதிர்வினையாக தேவி படத்தை திரையிட எதிர்ப்பு

ரெமோ, றெக்க இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாவதால் தேவி படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே படு டென்ஷனில் இருக்கிறார் பிரபுதேவா.

devi-pirabu-deva-thamanna

இந்த நேரத்தில்தான் புதிய தலைவலி ஒன்று முளைத்திருக்கிறது. அதாவது, காவிரி பிரச்சனையின் எதிர்வினையாக தேவி படத்துக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

தேவி படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான பிரபுதேவா கர்னாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால் கடந்த காலங்களில் அவர் தன்னை கன்னடத்துக்காரர் என்று எங்குமே அடையாளம் காட்டிக் கொண்டதில்லை.

இந்நிலையில் பிரபுதேவா கன்னடத்துக்காரர் என்ற உண்மை தற்போது வெளியே தெரிய ஆரம்பித்ததால் தேவி படத்துக்கு எதிர்ப்பு குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

காவிரி பிரச்சனையில் கர்னாடகா எடுக்கும் முடிவினால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் தேவி படத்தை தமிழ்நாட்டில் திரையிடக்கூடாது என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக காவிரி பிரச்சனையால் பெரிய அளவிலல் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பிரபுதேவாவின் தேவி படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்த எதிர்ப்புக்கு அஞ்சிய பல திரையரங்கு உரிமையாளர்கள் தேவி படத்துக்கு தியேட்டர் கொடுக்க தயங்குகிறார்களாம். இந்த திடீர் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பிரபுதேவா முழிபிதுங்கிப்போயிருக்கிறார்.

Recommended For You

About the Author: Editor