வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு நாடு முழுவதும் காற்று,மழையுடன் கூடிய காலநிலை தொடர வாய்ப்புள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணத்தால் கரையோரம் மற்றும் ஏனைய பகுதிகளில் காற்றின் வேகம் 70 – 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதனால் மீனவர்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.