காரைநகர் பேருந்து நிலையத்திலிருந்து சி.சி.டி கமரா அகற்றப்பட்டது

காரைநகர் பேருந்து நிலையத்தில் தனியார் ஒருவரால் பொருத்தப்பட்டிருந்த 6 சி.சி.ரி கமராக்களை புதன்கிழமை (01) அகற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

cctv-camara

காரைநகர் பகுதியை சேர்ந்தவரும் தற்போது இங்கிலாந்து இலண்டனில் வசித்து வரும் ஒருவரே இந்த சி.சி.ரி கமராக்களை பொருத்தி, காரைநகரில் நடைபெறும் விடயங்களை அவதானித்து வந்துள்ளார்.

மேற்படி நபர் காரைநகர் அபிவிருத்தி சங்கத்துக்கு நிதியுதவி செய்பவர் என்றும், இவருடைய நிதியுதவிலேயே காரைநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருந்தது எனவும் அப் பேருந்து நிலையத்திலேயே சி.சி.ரி. கமராக்களை பொருத்தியிருந்ததாகவும் பொலிஸார் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த சி.சி.ரி கமராக்களை அகற்றியதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.