காரைநகர் பிரதேச சபையில் மோதல்!, பணியாளர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு

காரைநகர் பிரதேச சபையின் தலைவருக்கும் செயலாளருக்கும் இடையில் பல மாதங்களாக இடம்பெற்று வரும் முரண்பாடுகளாலும் கூச்சல் காரணமாக தாங்கள் பணியினை மேற்கொள்ள முடியாதுள்ளதாக உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை நேற்று முதல் மேற்கொண்டுள்ளனர்.

Karainagar-pradesa-sabai

பல மாத காலமாக காரைநகர் பிரதேச சபையின் தலைவர் ஆனைமுகன் செயலாளர் கேதீஸ்வரிக்கும் இடையில் இடம்பெற்றுவரும் தொடர் முரண்பாடுகள் மற்றும் அலுவலகத்தில் இடம்பெறும் கூச்சல் காரணமாக தங்களால் பணி செய்ய முடியவில்லை.

எனவே அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என 31 பேர் நேற்று முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.