‘காரைநகர் சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாகவில்லை’

காரைநகர் பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, தற்கொலை செய்துள்ளார். பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கோ வண்புணர்வுக்கோ அவர் உள்ளாகவில்லை என யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ்தெரிவித்தார்.

காரைநகர் பகுதியில் காணாமல் போயிருந்த மாணவியான சண்முகராஜா குருக்கள் துவாரகா (வயது 17), அதே பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘குறித்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணையினை மேற்கொண்டுள்ளோம். இடம்பெற்ற பொலிஸ் விசாரணை மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையின் படி மாணவி தற்கொலை செய்துகொண்டமை உறுதியாகிறது.

மாணவியின் உடலில் காயம், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமைக்கான தடயங்கள் உடலில் இல்லை, மாணவி நஞ்சு அருந்தியமைக்கோ அல்லது அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டமைக்கோ எதுவித தடயமும் உடலில் இல்லை என உடல் கூற்று பரிசோதனை மேற்கொண்ட யாழ். போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி யு.மயூரதன், அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இதனை விட, வீட்டில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மாணவியை தற்கொலைக்கு தூண்டியுள்ளது. சம்பவ தினத்துக்கு முதல் நாள் மாணவிக்கும் தாயாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த மாணவி, மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் என்பது பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Recommended For You

About the Author: Editor