காயமடைந்த சப்ரகமுவ மாணவனிடம் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சி!

இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயமடைந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனிடம் அந்த காயங்களை அவர் சுயமாகவே ஏற்படுத்திக் கொண்டார் என மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

sutharshan-sabrakuvaa

பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினர் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்டதாலேயே காயம் ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பல்கலைக்கழகத்திலேயே தங்கியுள்ளனர் எனவும் பல தமிழ்மாணவர்களை விசாரித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor