சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பிலான உண்மைத்தன்மையை அரசு அறிவிக்க கோரியும் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகளால் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான
சிவாஜிலிங்கம் கலந்து கொண்டிருந்தார்.