காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெக்கப்பட்டது.

இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக முன்னெக்கப்பட்டது.

சர்வதேசத்திடம் நீதி வழங்குமாறு கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.