காணாமற்போனவர் சடலமாக மீட்பு

கடந்த 24ஆம் திகதி முதல் காணாமற்போன கரவெட்டி குருக்கள் வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயார் ஒருவர் இன்று திங்கட்கிழமை (27) காலை கரவெட்டியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தை சேர்ந்த உதயகுமார் சிவகுமாரி (வயது 42) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

மேற்படி பெண் கடந்த 24ஆம் திகதி வீட்டிலிருந்து பிள்ளைகளை தனியார் வகுப்பில் விட்டு வருவதாக சென்றவர் தொடர்ந்து வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து, இவரது உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்படி பெண்ணை காணவில்லையென முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்நிலையில் மேற்படி பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.