காசா அகதிகள் முகாமில் ஷெல் தாக்குதல்: 15 பேர் பலி

காசாவில் ஐநா மன்றத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது இஸ்ரேலியர்கள் ஷெல் தாக்குதல் நடத்தியதில் அதில் தங்கியிருந்த குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் என்று பாலத்தீன சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

காசா தாக்குதலில் காயமடைந்த ஒரு சிறுவன்
காசா தாக்குதலில் காயமடைந்த ஒரு சிறுவன்

மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் .

ஜபலியா அகதிகள் முகாமில் உள்ள இந்தப் பள்ளிக்கூடத்தில் சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் அடைக்கலம் புகுந்திருந்தனர்.

இந்த பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் இடம் இஸ்ரேலியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கட்டிடம் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி பல முறை தாக்கப்பட்டது என்று காசாவில் உள்ள ஐநா மன்ற மூத்த அதிகாரி பாப் டர்னர் கூறினார்.

இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதலை தான் விசாரித்துவருவதாகக் கூறுகிறது.