கல்முனையில் பூமியதிர்ச்சி !!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில் நேற்று இரவு 9.00 மணியளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதில் வீடுகளுக்கும் கட்டிடங்களுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டதுடன் நிலங்களிலும் சிறு,சிறு வெடிப்புக்களையும் காணக் கூடியதாகவுள்ளது .

இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. சிறிது நேரத்தில் பொலிஸாரும் அப்பகுதிக்கு வந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

இதேவேளை, பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று 6.1 ரிச்டர் அளவில் பயங்கர பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor