கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவி

தியாகி அறக்கொடை நிறுவனத்தால் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் வறுமை நிலையிலுள்ள 60 கர்ப்பிணிகளுக்கு மாதாந்த உதவித் தொகைகள் தியாகி அறக்கொடை நிறுவனத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (25) வழங்கப்பட்டன.

theyaki-pregnet

மாதாந்தம் தலா 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் இந்த உதவித் திட்டத்தின் பயனாளிகள், முதற்கட்டமாக மாநகர சபை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மற்றைய பிரதேசங்களிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக தியாகி அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

இந்த உதவித் தொகை மூலம் கர்ப்பிணித் தாய்மார்கள், தங்கள் ஆரோக்கியங்களைப் பேணிக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor