கத்தி படப்பிடிப்பு முடிந்தது! படக்குழுவினருக்கு விஜய் விருந்து!

துப்பாக்கி’யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வந்த படம் ”கத்தி”. இரண்டு வேடங்களில் அவர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்தது.

இந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த 40 நாட்களாக சென்னையில் நடந்து வந்ததோடு, கடைசி நாளன்று பூசணிக்காயும் உடைத்தனர்.

vijay

இதையடுத்து, சமீபகாலமாக தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் அப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் விருந்து கொடுப்பதை கடைபிடித்து வரும் விஜய், கத்தி படத்தில் பணியாற்றிய அனைத்து நபர்களுக்கும் நேற்று முன்தினம் அறுசுவை விருந்து கொடுத்து உபசரித்துள்ளார்.

அதுவும், வழக்கம்போல் தனது கையாலே அனைவருக்கும் விருந்து பரிமாறியிருக்கிறார். மேலும் கடைசி பந்தியில் தானும் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். ஆனால், படத்தின் நாயகியான சமந்தா, ஒரு தெலுங்கு படத்தில் சிக்கிக்கொண்டதால் அவரால் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லையாம்.

இருப்பினும், அடுத்து முன்னணி டெக்னீஷியன்களுக்காக நடக்கும் ஸ்டார் ஹோட்டல் விருந்தில் அவசியம் கலந்து கொள்வதாக உறுதி அளித்திருக்கிறாராம்.

Related Posts