தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களின் போட்டியில் முன்னணியில் இருப்பது விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் கத்தி படம்.
பல தடைகளை கடந்து தற்போது ரிலீசிற்கு காத்திருக்கும் இந்த படம் நேற்று சென்சார் போர்டின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கத்தி படத்துடன் தீபாளிக்கு ரிலீசாக உள்ள விஷால் நடித்த பூஜை படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ள சென்சார் போர்ட், கத்தி படத்திற்கு யு சான்றிதழ் வழங்கி உள்ளது.
சென்சார் போர்டும் அங்கீகாரம் வழங்கி விட்டதால் கத்தி படம் தீபாவளிக்கு ரிலீசாவது நூறு சதவீதம் உறுதியாகி விட்டது. இதனால் பூஜை படக்குழுவினரும் யு சான்றிதழ் பெறுவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளனர்.