கண்ணிவெடியில் சிக்கி ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயம்

BOMS_minsபருத்தித்துறை நாகர் கோயில் பகுதியில் இன்று காலை கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணியாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

22 வயதான ஜே.சயந்தன் என்ற பணியாளரின் கைகள் இரண்டிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.