கண்டியில் திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது

கண்டி- உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்தன.

இந்நிலையில் குறித்த குரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் ஏதோ ஒரு வகையான விஷம் உடலில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குரங்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

ஆனால், ஒருவகையான விஷம் உடலில் பரவியுள்ளமையினால் குரங்குகள் உயிரிழந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை பீட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.