கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் உயிரிழப்பு

dead-footகட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் யாழ்.போதன வைத்திசாலையில் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியினைச் சேர்ந்த சதீஸ்குமார் மஞ்சுளா (26) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு மாத கர்ப்பமாகவிருந்த மேற்படி பெண்ணுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைத்து கருத்தடை ஊசி போடப்பட்டதாகவும், இதனால் அவரின் உடல்நிலை மோசமடையவே யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பயனளிக்காமல் மேற்படி பெண் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்தி

வன்னியில் 3 கிராமங்களில் தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!