கட்சியிலிருந்து நீக்கியமை ஒரு தலைப்பட்சமான முடிவு – கமலேந்திரன்

Kamalகட்சியிலிருந்து தன்னை நீக்கியது ஒரு தலைப்பட்சமான முடிவு. அதனை நிராகரிக்க வேண்டும் என்று கோரி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஈ.பி.டி.பியின் முன்னாள் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான கந்தசாமி கமலேந்திரன்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈ.பி.டி.பியின் சார்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு அந்தக் கட்சி சார்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர் கந்தசாமி கமலேந்திரன்.

அவர் தற்போது ஈ.பி.டி.பியின் நெடுந்தீவுப் பிரதேசசபைத் தவிசாளரை சுட்டுக் கொலை செய் தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும், அதன் தொடர்ச்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்தும் நீக்கப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அந்தக் கட்சியின் செயலாளரினால் உத்தியோகபூர்வமாக கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலே கமலேந்திரன் தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “”என் மீதான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடப்படாது, எனது தரப்பு நியாயங்களைக் கேட்காது, ஒரு தலைப் பட்சமாக கட்சி நடந்து கொண்டுள்ளது. எனவே குறித்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts