கடவுச்சீட்டு தொடர்பான தகவல்களுக்கு 1962 அழைப்பு இலக்கம்

Call-telephoneகடவுச்சீட்டு உள்ளிட்ட அதனுடன் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் 1962 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வார நாட்களில் காலை 8 மணி முதல் 4.30 வரை 1962 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி கடவுச்சீட்டு உள்ளிட்ட அதனுடன் தொடர்பான சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கடவுச்சீட்டு விசா குடியுரிமை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டமையினால் குறித்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தெரிவிக்கப்படுகிறது.