ஒத்துழைப்பு தந்தால் வாள்வெட்டுக்களை இரு வாரங்களில் நிறுத்தலாம் – பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் இரு வாரங்களில் அவற்றினை இல்லாமல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொலிஸாரால் மேற்கொள்ள முடியும் என யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (08) தெரிவித்தார்.

underworld_group_vaal-Knife

யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெறும் மாதத் தொடக்கத்திற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (08) யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கினால், அச்சம்பவங்களை இரண்டு வாரங்களுக்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor