ஒக்டோபர் முதலாம் திகதி கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்!

ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளன.

இந்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாடு திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்தில் நாடு மீள திறக்கப்பட்டாலும் அது குறித்த பின்பற்ற வேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படவுள்ளதாக நேற்று இராணுவ தளபதி அறிவித்திருந்தார்.