ஐஸ் பக்கட் குளியலை ஆரம்பித்தவர் மரணம்

நரம்பியக்கங்களை செயலிழக்கச் செய்யும் Motor Neurone Disease எனப்படும் ஒருவகை நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் இந்நோய்பற்றி மக்களை தெளிவு படுத்துதல் தொடர்பில் ஐஸ் பக்கட் குளியலை (Ice Bucket Challenge ) ஆரம்பித்து வைத்த கோரி க்ரிபின் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

gorry-kirepin

கோரி க்ரிபின் உயர்ந்த இடத்திலிருந்து நீர் தடாகத்தில் குதிக்கும் போது உயிரிழந்துள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்தனர்.

அமெரிக்க பிரஜையான 27 வயதுடைய கோரி க்ரிபின் பல சமூக சேவைகளை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஐஸ் பக்கட் பல பிரபலங்களுக்கு ஒரு சவால் போட்டியாக அமைந்திருந்தமை சிறப்பம்சமாகும்.