ஐஸ் கிறீம், யூஸ் தடை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க யாழ்.வணிகர் சங்கம் முடிவு

குளிர்பான உற்பத்தியாளர்கள் மீது சட்டத்திற்குபுறம்பான வகையில் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டமை மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்குள் புகுந்து அதிகாரிகள் அடாவடித்தனங்களில் ஈடுபட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளதாக யாழ்.வணிகர் சங்கத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார பணிமனையால் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ் கிறீம், யூஸ் போன்றவற்றின் உற்பத்தியினை தடைசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்குக் காரணம் மேற்படி உற்பத்திகளில் மலத்தொற்று உள்ளது என்று கூறப் பட்டுள்ளது.

இது எந்தவிதமான முன்னறிவித்தல்களும் கொடுக்காமல் செய்யப்பட்டகாரியமாகும். இதனால் 58 நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அவர்களைச் சார்ந்தவர்களென சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டகுடும்பங்கள் முழுமையாகபாதிக்கப்பட்டுள்ளன.

உற்பத்தியாளர்கள் தமக்கு ஏற்பட்டபாதிப்பு சம்மந்தமாக நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் எமக்குசுட்டிக்காட்டியிரு ந்தார்கள். தமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

சில அதிகாரிகள் தமது நிறுவனங்களுக்கு வருகைதந்து அத்துமீறி நடத்தார்கள் என்றும், அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒருகுழுவாகவந்து ஜஸ்கிறீம், யூஸ் உற்பத்திகளை நிலத்தில் கொட்டியும்,குளிர்பானபெட்டிக்குள் மண் அள்ளிப் போட்டும் அடாவடித்தனத்தில் ஈடுபட்டதாகவும் உற்பத்தியாளர்கள் எமக்கு கவலையோடு தெரிவித்துள்ளனர்.

இந்தவருடம் மார்ச் மாதத்திற்கு முன்பாக அநேகமான மேற்படி உற்பத்தி நிறுவனங்கள் தமது உற்பத்தி அனுமதியினை புதுப்பித்திருந்தார்கள்.

குறிப்பாகஅவர்கள் தண்ணீர் சம்மந்தமானதும், உற்பத்தியாளர்களுடைய சுகாதாரம் மற்றும் அமைவிடம் சம்மதமான அனுமதியினை புதுப்பித்திருந்தார்கள்.

இவ்வருடத்திற்கானஅனுமதியினையும் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

அடுத்த 2015 ஆம் ஆண்டுமார்ச் மாதம் வரைக்கும் வழங்கப்பட்டுள்ள குறித்த அனுமதிகள் இருந்தபோதும் திடீரென வந்த சுகாதார திணைக்களத்தில் இருந்து வந்த அதி காரிகள் அதனை உற்பத்திகளில் தொற்று உள்ளது என்று கூறுவதில் எந்தநியாயமும் இல்லை.

சிறுகைத்தொழில் செய்பவர்கள் ஏராளமான பணத்தினை சுகாதாரதிணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய உழைப்பை செலவிட்டு தமது உற்பத்திகளை செய்து வந்தார்கள்.

தற்போது ஏன் இவ்வாறு திட்டமிட்ட மாதிரியான செயலைஅதிகாரிகள் செய்தார்கள் என்று புரியவில்லை. இச் செயற்பாடுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

யாழ்.குடாநாட்டில் உள்ள மக்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் உட்பட அனை வரும் பயன்படுத்தும் நீரைக் கொண்டு தான் அவர்கள் தமது உற்பத்தியை செய்கின்றார்கள்.

ஆனால் யாழில் உள்ளநிலத்தடிநீர் பழுதடைந்து உள்ளது என்ற அறிக்கை வெளிவந்து பல வருடங்கள் கடந்துவிட்டது.

ஆனால் கடந்தவருடம் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளின் கண்களுக்கு இவ்விடயங்கள் தெரியாமல் போனதுதான் ஏன் என்று புரியவில்லை. ஏன் உற்பத்தியாளர்களுக்குமுன்னறிவித்தல் கொடுக்கவில்லை.

இவ்விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

அதேபோன்று தமக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உற்பத்தியாளர்களுக்கு எதிராக செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தற்போது உருவாக்கப்பட்டுள்ள யாழ்.உபஉணவு மற்றும் குளிர்பானஉற்பத்தியாளர் சங்கம் சட்டநடவடிக்கைமேற்கொள்ளவும் முனைந்துள்ளது.

2015 ஆம் ஆண்டுவரைக்கும் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான அனுமதியினை வழங்கியவர்களே இவ்வாறு திடீர் தடை விதித்துள்ளதில் எந்தவிதமான நியாயம் இல்லை.

அதனை நியாயப்படுத்தவும் முடியாது. என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.