ஐசிஸ் அமைப்பிடம் பிடிபட்டவர்கள் கொல்லப்படும் புது காணொளி

முன்பு ஐசிஸ் என்று அறியப்பட்ட இஸ்லாமிய நாட்டுக்கான ஜிகாதிய குழுவினர் இராக்கில் தம்மிடம் பிடிபட்ட டசன் கணக்கானவர்களை சுட்டுக்கொல்லும் காணொளி காட்சியை வெளியிட்டிருக்கிறார்கள்.

_isis_iraq_video

உலகெங்கும் ஈத் பெருநாள் கொண்டாடப்படும் வேளையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த 30 நிமிட காணொளியின் துவக்கத்தில், முகமூடியணிந்த இஸ்லாமிய நாட்டுக்கான ஜிகாதிய குழுவைச் சேர்ந்த துப்பாக்கிதாரிகள் ஒரு தொகுதி இளைஞர்களை ஒரு நதியை நோக்கி அழைத்துச் செல்வதாக காட்டப்படுகிறது.

அடுத்த கட்டமாக அந்த இளைஞர்கள் ஒவ்வொருவராக பிஸ்டலால் சுடப்பட்டு அவர்களின் சடலங்கள் நதியின் நீரில் தள்ளப்படுவதையும் எட்டி உதைக்கப்படுவதையும் அந்த காணொளி காட்டுகிறது.

இதில் கொல்லப்படும் இளைஞர்கள் அனைவரும் ராணுவத்தினரா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் ஷியாக்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள்.

தங்களை எதிர்த்து போராடும் இராக்கிய அரசு ராணுவத்தினருக்கும் இதே கதியே ஏற்படும் என்று அந்த காணொளி எச்சரிக்கை விடுக்கிறது.

Recommended For You

About the Author: Editor