ஏ 9 வீதியில் விபத்து, ஒருவர் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

ஏ9 வீதியில், இன்று காலை 9.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு பெண்கள் வீதியை கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனம் மோதியதில் பெண்ணொருவர் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்ததோடு, மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.