ஏழாலையிலுள்ள வீட்டில் கொள்ளை; இருவர் கைது

arrest_1ஏழாலை மேற்கிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழாலை வடக்கைச் சேர்ந்த இருவரை நேற்று திங்கட்கிழமை (28) மாலை கைதுசெய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீட்டிலுள்ளவர்கள் நேற்று திங்கட்கிழமை (28) பகல் வெளியில் சென்றிருந்தபோது இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

வீட்டின் பின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தவர்கள் 24 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கநகைகளையும் 45,000 ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக சுன்னாகம் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்தார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

Recommended For You

About the Author: Editor