எரிவாயு விநியோகத்தை மட்டுப்படுத்தியது லிட்ரோ; நகரங்களில் உள்ளோருக்கு முன்னுரிமை

ஒவ்வொரு நாளும் சந்தைக்கு வெளியிடும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளாந்தம் சந்தைக்கு வெளியிடப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் இரண்டு மாதங்களுக்கு இந்த கட்டுப்பாடு நடைமுறைப்டுத்தப்படும் எனவும் லிட்ரோ காஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இது ஏற்கனவே செயல்பாட்டில் இருப்பதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எரிவாயு விநியோகம் நகரங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்படும் என்று லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“எண்பதாயிரம், சுமார் 30 ஆயிரமாகக் குறைக்கப்படும். 28 சதவீதம் நகரங்களில் உள்ளன. நகரங்களில் உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

தற்போது விறகு இல்லாமல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு வழங்க வேண்டும். அல்லது இதைச் செய்ய வழியில்லை.

இந்த பணத்தின் பிரச்சனையுடன்.நாட்டில் மாதாந்த எரிவாயு தேவையை நிறைவு செய்வதற்கு சுமார் 30 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகிறது” என்று லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டிள்ளது.