என்னம்மா கண்ணு சௌக்கியமா?

கவிப்பேரரசு வைரமுத்துவின் 60-வது பிறந்தநாள் கவிஞர்கள் திருநாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டதை அறிந்து பிரம்மித்த பலருக்கும், வைரமுத்து அந்த கொண்டாட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து மேலும் ஆச்சரியம் உண்டானது.

vairamuthuu-rajini

உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வைரமுத்து, சிறு அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். வைரமுத்துவின் நலன்விரும்பியும், நண்பருமாகிய ரஜினி வைரமுத்துவை அவரது இல்லத்திற்கே சென்று உடல்நலம் விசாரித்திருக்கிறார். பூங்கொத்து கொடுத்து வைரமுத்துவின் உடல்நலம் விசாரித்த ரஜினி சிறிது நேரம் அவருடன் பேசிவிட்டுச் சென்றாராம்.

ரஜினி நடித்த மிஸ்டர் பாரத் படத்தில் ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா?’ பாடலை ரஜினிக்காக எழுதிக்கொடுத்தவர் வைரமுத்து. தற்போது வைரமுத்துவிடம் ரஜினி ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா?’ என்று கேட்டு தான் உடல்நலம் விசாரித்திருப்பார் என்று கற்பனை செய்து படம் போட்டு ரஜினி ரசிகர்கள் மகிழ்கிறார்கள்.

Recommended For You

About the Author: Editor