எந்நிலையிலும் நாட்டரிசி 105 ரூபாயைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படாது – அரசாங்கம்

எந்தவிதமான நிலைமையிலும் நாட்டரிசி 105 ரூபாயைவிட அதிக விலைக்கும் சம்பா அரிசி 130 ரூபாயைவிடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படாத வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மெலும் தெரிவித்துள்ள அவர், வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில், இந்தியாவிலிருந்து இரண்டு இலட்சம் மெற்றிக் டன் நாட்டரிசியையும் ஒரு இலட்சம் மெற்றிக் டன் சம்பா அரிசியையும் தனியார் துறையின்றி அரச வணிக கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

எனவே செயற்கையாக அநீதியான முறையில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளத் திட்டமிடுபவர்களுக்கு அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட அரசாங்கத்தால் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.