எதிர்வரும் வியாழக்கிழமை வடக்கு கிழக்கில் மழை

இடைக்கால பருவப்பெயர்ச்சி மழையை எதிர்வரும் வார இறுதியில் எதிர்ப்பார்க்க முடியும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வார இறுதியில் இடைக்கால பருவப்பெயர்ச்சி மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி அனுஷா வர்ணசூரிய தெரிவிக்கின்றார்.

இம்முறை சற்று குறைவான மழைவீழ்ச்சியே காணப்படும் . எதிர்வரும் வியாழக்கிழமை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையை எதிர்ப்பார்க்க முடியும் என்றும் இடைக்கால பருவப்பெயர்ச்சி அடுத்த மாத நடுப்பகுதி வரை தொடரும் எனவும் திருமதி வர்ணசூரிய தெரிவித்தார்.

இதனால் பெரும்போக பயிர்ச் செய்கைக்கான நீர்ப்பாசனத்தை பெற்றுக் கொடுப்பதில் அடுத்த மாத தொடக்கம் வரை சற்று தாமதம் ஏற்படும் என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor