எதிர்க்கட்சித் தலைவராக தவராசா நியமனம்?

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.தவராசா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தனர்.

thavarasa

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதால் ஜனாதிபதி தவராசாவினைத் தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெகஷிசன் கொலை வழக்கில் கொலைக் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டு வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுளார்.

அத்துடன், அவர் ஈ.பி.டி.பியில் இருந்தும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டார்.

இதனால் எஸ்.தவராசா வடமாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் புதன்கிழமை (23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையிலே அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி

வடமாகாண சபை உறுப்பினராக சின்னத்துரை தவராசா சத்தியப்பிரமாணம்!

Related Posts