ஊவா வன்முறை வீடியோ ஐ.நா.வுக்கு அனுப்பிவைப்பு

ஊவா மாகாண சபைக்கான தேர்தலின் போது இடம்பெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான ஒளிநாடா (வீடியோ), படங்கள் மற்றும் அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் சர்வதேச நடவடிக்கை தொடர்பான உதவிச்செயலாளர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

மாகாண சபை வரலாற்றிலேயே அதிகூடுதலான விருப்புவாக்கு சதவீதத்தை பெற்ற ஊவா மாகாண சபைக்கான ஐக்கிய தேசியக்கட்சி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் 100க்கும் அதிகமானவை பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள வீடியோ, படங்கள் மற்றும் அறிக்கைகளின் பிரதிகள் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவை மற்றும் அனைத்துல நாடாளுமன்ற சங்கம் ஆகியவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.