“ஊரடங்கு உத்தரவை நீக்கினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” – நாளைய கூட்டத்தில் இறுதித் தீர்மானம்

நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி இல்லை என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

“கடந்த காலங்களில் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி போடப்படாத நபர்களாகும்.மேலும் அதிகமான தனிநபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதால், உயிரிழந்தவர்களில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அதிகமாக இருப்பதையும் சேர்த்தனர்.

எனினும் எதிர்காலத்தில் வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் நபர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படும்.

ஃபைசர் தடுப்பூசி அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக கல்வி வெளிநாடு செல்லும் இளைஞர்கள் மற்றும் வேலைக்காக செல்லும் நபர்களுக்கும் வழங்கப்படுகிறது” என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர், மருத்துவ வல்லுநர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor