ஊரடங்கின் போது மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

நாட்டில் தற்போது ஊரடங்கு அமுல்படுத்தபட்டடு வருகின்றது. இந்நிலையில், பகுதியளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் வருகின்றது.

இந்நிலையில், ஊரடங்கின் போது தனியார் மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.