உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிக்குமாறு கோரிக்கை!

உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, இந்த அதிகரிப்பை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேநீர் தயாரிப்பதற்காக பால்மாவை பயன்படுத்துவதைவிட பசும்பாலை பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு இலாபகரமானது என மில்கோ சங்கத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், பசும்பாலை உபயோகப்படுத்துவது தற்போது காணப்படும் பால்மா பற்றாக்குறைக்கு தீர்வாக அமையும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.