Ad Widget

உலகில் ஆபத்தான வெடிக்காத வெடிபொருட்கள் உள்ள பிரதேசமாக முகமாலை

உலகில் மிகவும் ஆபத்தான வெடிக்காத வெடிபொருட்கள் உள்ள பகுதியாக யாழ்ப்பாணம் – முகமாலை பிரதேசம் உள்ளதாக மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் கடந்த 13 வருடங்களாக கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனம், அண்மையில் முகமாலை பிதேசத்தில் இரண்டு இலட்சம் மிதிவெடிகளை அகற்றியுள்ளது.

இந்த நிறுவனத்தின் தகவலின்படி ஈராக் அல்லது முகமாலை பிரதேசமாக உலகில் ஆபத்தான மிதிவெடி மற்றும் வெடிபொருள் அபாயம் உள்ள பிரதேசம் என்பது தொடர்பில் ஆராய்வுகள் இடம்பெற்று வருவதாகவும்,

ஈராக்கை விட முகமாலை பிரதேசத்திலேயே மிதிவெடி மற்றும் கண்ணிவெடிகளுக்கு அப்பால் பொறிவெடி மற்றும் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் வேறு எங்கும் இவ்வாறு வெடிபொருட்கள் காணப்படவில்லை எனச் சுட்டிக்காட்டும் குறித்த நிறுவனம், கடந்த 13 வருடங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் இதுவரை இரண்டு இலட்சம் மனித எதிர்ப்பு மிதிவெடிகளும், 41 ஆயிரத்து 601 பரந்து கிடந்த வெடிபொருட்களும், 778 வெடிக்காத வெடிபொருட்களும், 875 வாகன எதிர்ப்பு வெடிபொருட்களும், 6 இலட்சத்து 71 ஆயிரத்து 724 வெடிபொருட்களின் சிறிய துண்டுகளையும் மீட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts