உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 9 ஆம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி ஓரிரு நாள்களில் வலுவிழந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிகக் கனமழையும் கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 20 ஆம் திகதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணிநேரத்தில் காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மேலும் புயலாக வலுவடையுமா என்று கண்காணிப்பு மையம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.