உயிர் கொடுத்தார் தாய் , கருவில் சுமந்தார் தந்தை

ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஒருவரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஒருவருக்கும் திருமணம் செய்து இரு பிள்ளைகள் சகிதம் அமைதியாக குடும்ப வாழ்வு வாழும் விநோதம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

Transgender-couple

பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய நிக்கும் (27 வயது) ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய பியன்காவும் (32 வயது) கடந்த 7 வருடங்களாக இணைந்து வாழ்கின்றனர்.

அவர்களுக்கு கே (3 வயது) மற்றும் பக்ஸ் (ஒருவயது) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நிகொலி என்ற இயற்பெயரைக் கொண்ட நிக் 7 வருடங்களாக ஆணாக வாழ்ந்து வருகின்றார். அதேசமயம் ஜேஸன் என்ற இயற்பெயரைக் கொண்ட மியன்கா கடந்த 11 வருடங்களாக பெண்ணாக வாழ்ந்து வருகின்றார்.

மேற்படி குழந்தைகள் தாயான பியன்காவின் விந்தணுக்கள் மற்றும் தந்தையான நிக்கின் கருமுட்டை என்பவற்றின் மூலம் கருத்தரித்து பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த குழந்தைகளை தந்தையான நிக்கே தனது கருப்பையில் சுமந்து பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.