உயர் நீதிமன்ற வளாகத்தில் சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டது!

கொழும்பு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள கட்டட வளாகத்தில் சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலையில் தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயினால் உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு கோப்புகள் உள்ளிட்ட பொருள்களுக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை என்று நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களம் இந்த தீ சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“இன்று (16-12-2020) மாலை 4.45 மணியளவில் கொழும்பு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள கட்டட வளாகத்தில் சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலையில் தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயினால் உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு அலுவலகத்திற்கோ அல்லது கோப்புகள் உள்ளிட்ட பொருள்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை

இந்த சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலை உயர் நீதிமன்றம் அமைந்துள்ள பிரதான கட்டடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள கட்டடத்தின் தரைத் தளத்தில் உள்ளது. இதற்கமைவாக இந்த தீயின் மூலம் பாதிக்கப்பட்டமை சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலை மாத்திரமேயாகும்.