உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் தற்போது நடைபெற்று வரும் 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நேற்று (26) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும், பரீட்சை நவம்பர் 30 ஆம் தேதி (சனிக்கிழமை) மீண்டும் தொடங்கும் என்றும், முன்பு திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள பாடங்களுக்கான பரீட்சை முறையே டிசம்பர் 21, 22, 23 ஆம் திகதிகளில் நடைபெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Posts