உதவி ஆசிரியர்களின் சம்பளம் குறைப்பு!

Joshep-starlin2வட மாகாண உதவி ஆசிரியர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

10,000 ரூபாவிலிருந்து 6,000 ரூபாவாக இந்த சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

வட மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே மாகாண உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

எனினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்த சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது என ஜோசப் ஸ்ராலின் மேலும் குறிப்பிட்டார்.