யாழ்.ஊர்காவற்றுறையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் வீட்டின் கூரைகளுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ரி 56 ரக துப்பாக்கி, மகசின் மற்றும் 15 ரவவைகள் என்பன கைப்பற்றப்பட்டதுடன், குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரது மனைவியினைக் கைது செய்து விசாரணை செய்து வருவதாகப் பொலிஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
கந்தையா வருணன் என்ற மேற்படி நபருடைய வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக இராணுவத்தினருக்குக் கிடைத்த ரகசிய தகவலினையடுத்து, ஊர்காவற்றுறைப் பொலிஸாருடன் குறித்த வீட்டிற்கு சென்ற இராணுவத்தினர் ஆயுதங்களை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.