ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் பட்டமளிப்பு வைபவம்

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இயங்கிவரும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் ஆங்கில டிப்ளோமாப் பாடநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு வைபவம் கல்லூரியின் அதிபர் லயன்.ஜெ.ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் 17.08.2014 அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபையின் போக்குவரத்து, மீன்பிடி, கிராமிய அபிவிருத்தி, வர்த்தகத்துறை கௌரவ அமைச்சர் டீ.டெனீஸ்வரனும் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி திருமதி.சறோஜினி இளங்கோவன், வேலணைப் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ சின்னையா சிவராசா(போல்), வட மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ சந்திரலிங்கம் சுகிர்தன், கௌரவ விந்தன் கனகரத்தினம் ஆகியோரும் ஆசியுரைகளை உலக இந்து மத குருமார் ஒன்றியத் தலைவர் சிவசிறி வாசுதேவக் குருக்கள், வண பிதா. யோக்கப் நீக்லஸ் அடிகளார், மற்றும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபர் மௌலவி முபாரக் அவர்களும் வழங்குவர் என கல்லூரியின் பணிப்பாளர் லயன்.டாக்டர்.க.ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor