ஈரானிய விமான விபத்தில் பலியானோருக்கு ஜனாதிபதி இரங்கல்!

ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபத்தினை ஈரானிய ஜனாதிபதி கலாநிதி ஹசன் றௌஹனிக்கான (Dr. Hassan Rouhani) கடிதமொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“ஈரானிய அரசாங்கம் மற்றும் மக்களுக்கான, குறிப்பாக இழப்பினைச் சந்தித்துள்ள குடும்பங்களுக்கான, இதயபூர்வ அனுதாபங்களைத் தெரிவிப்பதிலும், இந்த அவலத்தில் காயமடைந்தவர்கள் விரைவாகக் குணமடைவதற்கான வேண்டுதலிலும் இலங்கையின் அரசாங்கமும், மக்களும் என்னோடு இணைகிறார்கள்.” என ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி, இந்த விபத்தில் 39 பேர் மரணமடைந்ததோடு, மேலும் பலர் காயமடைந்தனர்.

Recommended For You

About the Author: Editor