இலங்கை வரும் ரமபோஷாவை கூட்டமைப்பு நாளையதினம் சந்திக்கும்!

sampanthanஇன்று திங்கட்கிழமை இலங்கை வரும் தென்னாபிரிக்காவின் விசேட தூதுவர் ரமபோஷா தலைமையிலான குழுவினரை நாளையதினம் செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இச்சந்திப்பு நாளை செவ்வாய்க்கிழமை தாஜ்சமுத்திரா ஹோட்டலில் காலை 7.15 மணியளவில் இடம்பெறும். இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வர்.

கொழும்பில் ரமபோஷா குழுவினருடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தும்போது தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புகள், மீள்குடியேற்றத்தில் அரசு காட்டும் தாமதம், அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.