யாழ். வடமராட்சி கரணவாய் வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வதரி துலாக்கட்டு வீதியில் உள்ள மின் கம்பம் நேற்று காலை 10.00 மணி அளவில் சரிந்து விழுந்த நிலையில் இவ் வீதியால் பயணிக்கும் மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டது.
இவ்விடயத்தினை அப் பகுதி மக்கள் உடனடியாக கரவெட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையினருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டும் உரியவேளை நடவடிக்கை எடுக்காமல் 06 மணியாலத்திற்கு பின்னர் சம்பந்த இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுத்த மின்சார சபையின் மீது அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அப்பிரிவு பிரதேச செயலகத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மின்சார சபையினருக்கும் முறையிட்டுள்ளனர்.