இலங்கை மக்களுக்கு திமுக நிதி உதவி!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வாடும் மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு திமுக எம்.பி.க்கள் ரூ.30 லட்சம் நிதியை புதன்கிழமை அளித்தனா்.

பொருளாதார நெருக்கடியால் வாடும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண நிதி அளிக்குமாறு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் ஒரு மாத ஊதியமான ரூ.30 லட்சத்துக்கான காசோலையை எம்.பி.க்கள் டி.ஆா்.பாலு, ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் வழங்கினா். அப்போது, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு உடனிருந்தாா்.