இலங்கை பற்றிய பிரதிபலிப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தால் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை நிறுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் வௌிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தால், குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தின் கடைசி சில மாதங்களில் பெருந்தொகை பணம் இவ்வாறு செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்களுக்காக இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு எட்டு ஒப்பந்தங்களுக்காக மாதாந்தம் 5000 டொலர் முதல் 75000 டொலர்கள் வரை, கடந்த அரசாங்கத்தால் வௌிநாட்டு அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் குறைந்த பட்ச அனுகூலங்களே இதன்மூலம் கிடைத்துள்ளதாகவும் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.